தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக 2.30 லட்சம் பெண்களை இணைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே இந்த திட்டத்தில் பயனாளிகளின் வங்கி கணக்கில் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படுகிறது. தற்போது புதிய பயனாளர்களை இணைப்பதற்கான விண்ணப்பங்கள் ஜூன் மாதம் முதல் விநியோகிக்கப்படும் என கூறியுள்ள அதிகாரிகள், புதிதாக 2.30 லட்சம் பெண்களை இணைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.