மத்திய பிரதேசம் மாநிலம் ராஜ்கர் என்ற மாவட்டத்தில் பிப்லோதிஜாத் என்ற இடத்தில் நேற்று இரவு டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு திரும்பி வந்து கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்ட நிலையில் விபத்தில் நான்கு குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இருவர் தலை மற்றும் மார்பில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக போபாலுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.