கர்நாடகா வை சேர்ந்தவர் பிரசாத்(45). இவரது சகோதரர் குமார்(39). இந்நிலையில் குமாருக்கு அண்ணன் மனைவி அண்ணி மீது  தீராத மோகம் இருந்து வந்துள்ளது. தனது அண்ணன் பிரசாத்தின் மனைவியை குமார் அடிக்கடி  உல்லாசத்திற்கு அழைத்து வந்துள்ளார். இதனால் தனது மனைவியை பாலியல் உறவுக்கு அழைத்த தனது தம்பி குமாரை, அண்ணன் பிரசாத் கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் சம்பவத்தன்று தகராறு ஏற்பட்டது.

இதில் நடந்த சண்டையில் குமார், கத்தியால் தனது அண்ணன் பிரசாத்தை சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பிரசாத் பரிதாபமாக உயிரிழந்தார். தனது அண்ணனை கொலை செய்த குமாரை போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.