தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமானவர் இமான் அண்ணாச்சி. இவர் தொலைக்காட்சிகளில் குழந்தைகள் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் நடிகர் விஜய் நடித்த வேட்டைக்காரன் திரைப்படத்தில் இமான் அண்ணாச்சியின் நடித்துள்ளார். அப்போது ஒரு காட்சியில் 250 பேர் நடித்துள்ளனர்.

இந்த காட்சியை பார்த்த நடிகர் விஜய் இமான் அண்ணாச்சியை அழைத்து பேசியுள்ளார். அவரிடம் நடிகர் விஜய் இதற்கு முன் படத்தில் நடித்திருக்கிறீர்களா என்று கேட்டுள்ளார். அதற்கு இமான் அண்ணாச்சி இல்லை என கூறியுள்ளார். அதற்கு நடிகர் விஜய் உங்களுக்குள் நல்ல நடிப்பு திறமை இருக்கிறது. நீங்க பெரிய ஆளா வருவீங்க என்று கூறியுள்ளார். மேலும் இந்த பாராட்டு தன்னுடைய வாழ்க்கையையே மாற்றிவிட்டதாக இமான் அண்ணாச்சி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.