தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனான ஜெயம் ரவி  மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இடையேயான விவாகரத்து மற்றும் குடும்பநல வழக்குகள் தொடர்பான விவகாரம் தொடர்ந்து கோலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாகி வருகிறது.

இந்நிலையில், இந்த வழக்கில் நீதிமன்றம் வழங்கியுள்ள புதிய மற்றும் அதிரடியான தீர்ப்பு ஜெயம் ரவி தரப்புக்கு மிகப்பெரிய நிம்மதியை அளித்துள்ளதுடன், சமூக வலைதளங்களில் பெரிதும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

தனது மாதாந்திர செலவுகளுக்காகவும் ஜீவனாம்சமாகவும் மாதம்ததோறும் ரூ.40 லட்சம் வழங்க வேண்டும் என்று ஆர்த்தி தரப்பில் விடுக்கப்பட்ட பிரதான கோரிக்கையை நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது. அதற்குப் பதிலாக, மாதந்தோறும் ரூ.3 லட்சம் மட்டுமே ஜீவனாம்சமாக வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்தத் தீர்ப்பு சமூக வலைதளங்களில் பலராலும் வரவேற்கப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி, கடந்த சில காலமாகத் தங்களது குழந்தைகளைத் தந்தை ஜெயம் ரவியை நேரில் சந்தித்துப் பேசவோ பார்க்கவோ ஆர்த்தி அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வந்த நிலையில், தற்போது நீதிமன்றம் அந்தத் தடையை அதிகாரப்பூர்வமாக நீக்கியுள்ளது.

“>

 

அதன்படி, நடிகர் ஜெயம் ரவி தனது குழந்தைகளை எப்போது வேண்டுமானாலும் சந்திப்பதற்கான முறையான மற்றும் தடையற்ற ஏற்பாடுகளை நீதிமன்றம் தற்போது உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.