தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன், தனது அடுத்த திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை நாயகனாகக் களமிறக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘அரசன்’, ‘ராஜன்’ வரிசைப் படங்களின் பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்தவுடன் இக்கூட்டணி அதிகாரப்பூர்வமாக இணைவதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

இதுவரை வெற்றிமாறன் இயக்கிய படங்களில் காணப்படும் வழக்கமான கச்சாத்தனமான கிரைம்-டிராமா பாணியிலிருந்து முற்றிலுமாக விலகி, இப்படமானது முற்றிலும் கிராமத்துப் பின்னணியைக் கொண்ட குடும்பங்கள் கொண்டாடும் கமர்ஷியல் திரைப்படமாக உருவாகவுள்ளது கூடுதல் சிறப்பம்சமாகும்.

மேலும், நீண்ட நாள்கள் படப்பிடிப்பு நடத்தும் வழக்கத்தைத் தவிர்த்து, மிகக் குறுகிய காலக்கெடுவிற்குள் முழுப் படப்பிடிப்பையும் திட்டமிட்டு முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் திரைத்துறையில் பேசப்படுகிறது.

“>

 

வெற்றிமாறன் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் முதன்முறையாகச் குடும்பப் பாணிப் படத்துக்காகக் கைகோர்க்கும் இந்தப் புதிய அறிவிப்பு தற்பொழுது சினிமா வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.