பிரபல இயக்குனர் வசந்த பாலன் தற்போது தலைமைச் செயலகம் என்ற வெப் தொடரை இயக்கியுள்ளார். இந்தத் தொடர் தமிழக அரசியல் பின்னணியில் உருவாகியுள்ளது. இந்த தொடரில் நடிகர்கள் கிஷோர், பரத், ஆதித்யா மேனன், ஸ்ரேயா ரெட்டி உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த வெப் தொடர்‌ மே 17ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த வெப் தொடரின் டிரைலர் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோவை நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ளார். இது தமிழக அரசியலில் இரக்கமற்ற அதிகார வேட்டையை கூறும் கதையாக எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தேசிய விருது பெற்ற இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் உருவாக்கியுள்ள தலைமைச் செயலகம் தொடரின் ட்ரெய்லர் வீடியோ தற்போது ரசிகர்களை கவர்ந்து சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.