தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார். இவர் வருகின்ற சட்டசபை தேர்தலில் போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து சிறப்பு செயலி மூலம் தமிழக வெற்றி கழகத்திற்கு புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானோர் கட்சியில் இணைந்துள்ளனர். இந்நிலையில் ஜூன் 4-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்வுகள் முடிவடைந்த பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட இருக்கிறது. அந்த வகையில் நடிகர் விஜயின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி மிகப்பெரிய பொதுக்கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர். மேலும் அதன்படி மதுரையில் தமிழக வெற்றி கழகத்தின் மாபெரும் மாநாடு நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.