மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை அனஸ்வரா ராஜன். இவர் தற்போது படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இவர் நடிகை திரிஷா நடிப்பில் வெளிவந்த ராங்கி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்த நிலையில், தற்போது நடிகர் ஜிவி பிரகாஷ் உடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை அனஸ்வரா ராஜன் சிறுவயதில் தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.

அதாவது அவர் 4-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் முன்பு ஒருவர் உட்கார்ந்திருந்த சுய இன்பம் செய்துள்ளார். அந்த வயதில் எதற்காக அவர் என்னிடம் அதை காட்டினார் என்பது கூட எனக்கு புரியவில்லை. ஆனால் இப்படிப்பட்ட ஆட்கள் எப்படி பெண்களுக்கு பாதுகாப்பாக இருப்பார்கள். மேலும் இதையெல்லாம் நினைத்தாலே மிகவும் பயமாக இருக்கிறது என்று வேதனையுடன் கூறியுள்ளார்.