இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருப்பவர் நேஷனல் கிரஷ் என்று அழைக்கப்படும் நடிகை ராஸ்மிகா மந்தனா. இவர் தென்னிந்திய சினிமாவில் மட்டுமின்றி பாலிவுட்டிலும் நடித்து வருகிறார். இவர் கடந்த வருடம் ரன்வீர் சிங் நடித்த அனிமல் படத்தில் நடித்ததன் மூலம் பாலிவுட்டில் இருந்து அதிக பட வாய்ப்புகள் வருகிறது.

அந்த வகையில் தற்போது ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சல்மான்கான் நடிக்கும் சிக்கந்தர் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா நடிக்க உள்ளார். அதன்படி 58 வயதாகும் பாலிவுட்டின் டாப் ஹீரோ சல்மான்கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருக்கிறார். மேலும் இந்த தகவலை நடிகை ராஷ்மிகா மந்தனா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.