தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயத்தை உணர்த்துகிறது. கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தை காட்டிலும் குறைந்துள்ளதால் மாநிலம் முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

தமிழக நீர்வளத்துறை வெளியிட்ட அறிக்கையின்படி ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் சென்னை, திருவள்ளூர், சேலம் உள்ளிட்ட 27 மாவட்டங்களில் நீர்மட்டம் குறைந்துள்ளது. அதேநேரம் கடந்த ஆண்டு பெய்த கனமழை காரணமாக நெல்லை, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.