இந்தியாவில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக கூகுள் ஒரு தனியார் டிஜிட்டல் வாலட்டை அறிமுகப்படுத்தி உள்ளது. இது கிரெடிட், டெபிட் கார்டுகள், லாயல்டி கார்டுகள், கிப்ட் கார்டுகள், டிக்கெட்டுகள், பாஸ்கள், ஐடிகள் ஆகியவற்றை பாதுகாப்பாக சேமிக்க முடியும். இந்த வாலட் பரிவர்த்தனை அல்லாத நோக்கங்களுக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது. மெட்ரோ ரயில் டிக்கெட்களையும் சேமித்து வைக்கும் வகையில் அந்நிறுவனம் மெட்ரோ உரிமையாளர்களுடன் பேச்சு வார்த்தையில் இருப்பதாக கூறப்படுகிறது.