உலக அளவில் உருவ கேலி என்பது பிறரது மனதை புண்படுத்தும் மோசமான குற்றமாக கருதப்பட்டு வருகிறது.  உருவ கேலியை  தடுப்பதற்காக பல அமைப்பினரும்,  தலைவர்களும்,  சினிமா பிரபலங்களும் தங்களது கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.  இந்நிலையில் தலையில் முடி அடர்த்தி குறைவாக உள்ள வழுக்கைதலை கொண்டவர்களை உருவ கேலி செய்வதை தடுப்பதற்காக,  ஒவ்வொரு ஆண்டும் கவர்ச்சிகரமான வழுக்கை தலை கொண்ட நபர் என்ற பட்டம் பிரபலங்கள் சிலருக்கு வழங்கப்பட்டு கௌரவிக்கப்படும். அந்த வகையில், 

2023 ஆம் ஆண்டில் மிகவும் கவர்ச்சிகரமான வழுக்கை தலை  கொண்ட நபர் என்ற பட்டத்தை இங்கிலாந்து இளவரசர் வில்லியம் பெற்றுள்ளார். சென்ற ஆண்டு இந்த பட்டத்தை பாஸ்ட் & பியூரியஸ் திரைப்படத்தின் பிரபலமான நடிகர் வின் டீசல்-க்கு இந்த ஆண்டு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது. உயரம்,  குரல்,  வசீகரம், தலையின் பளபளப்பு தன்மை  என பத்து மதிப்பெண்களுக்கு 9.88 மதிப்பெண்கள் பெற்று இங்கிலாந்து இளவரசர் கவர்ச்சிகரமான வழுக்கை  தலை என்ற இப்பட்டத்தை தட்டிச் சென்றுள்ளார்.