வழக்கத்திற்கு மாறான சிந்தனை மற்றும் பரிசோதனைக்கான ஆர்வம் உடைய  நபர் ஒருவர்,  தனது வாகனத்தை மாற்றி அமைத்து அதை இயக்கும் வீடியோ ஆன்லைனில் வெளிவந்துள்ளது. அதன்படி, தனது டெஸ்லா காரிலிருந்து டயர்களை அகற்றி, அதற்குப் பதிலாக 10 அடி உயரமுள்ள சக்கரங்களைப் பொருத்தி, 

முதலில் அதை வேகமாக இயக்கியும்,  பின் இன்னும் வித்தியாசமாக இருக்கும் வகையில்,  தலைகீழாக அதை ஓட்டிச் சென்று வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.  இந்த வீடியோ காட்சிகள் பல்வேறு சமூக ஊடக தளங்களில் விரைவாக வைரலாகி, உலகளாவிய பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.