நீட் தேர்வு எழுதி மருத்துவம் படிக்கத் துடிக்கும் 71 வயது முதியவர் ஒருவர், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

அசோக் பகார் என்ற அந்த முதியவர், மருத்துவப் படிப்புகளில் (MBBS) சேரும் மூத்த குடிமக்களுக்கு 1 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தனது மனுவில் கோரியுள்ளார்.

கல்விக்கு வயது வரம்பு இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில், இந்த வயதிலும் நீட் தேர்வுக்காக அவர் தீவிரமாகப் படித்து வருகிறார். வயது முதிர்ந்தவர்களுக்கும் மருத்துவக் கல்வியில் வாய்ப்பளிக்க வேண்டும் என்ற அவரது இந்த வித்தியாசமான கோரிக்கை, சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்த வழக்கு வரும் ஜூலை 21-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது, இது மருத்துவக்கல்வி சேர்க்கையில் புதிய மாற்றத்தைக் கொண்டுவருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.