பிரபல சர்வதேச கிரிக்கெட் வீரர் ஒருவர் ரயிலில் பயணம் செய்தபோது பிட் பாக்கெட் அடித்து மாட்டிக்கொண்டதாகவும், அவரைப் பயணிகள் மற்றும் காவல்துறையினர் கடுமையாகத் தாக்கியதாகவும் கூறி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வைரலாகும் அந்த வீடியோவில், ரயிலில் திருட முயன்ற ஒரு நபரைப் பிடித்து மக்கள் சரமாரியாகத் தாக்குவதும், அவர் வலியால் அலறுவதும் தெளிவாகப் பதிவாகியுள்ளது.
View this post on Instagram
தாக்குதலுக்கு உள்ளான அந்த நபரின் முகம், பிரபல பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலியைப் போலவே இருப்பதால், “கிரிக்கெட் வீரர் திருடி மாட்டிக்கொண்டார்” என்ற தவறான தகவலுடன் இந்த வீடியோ பகிரப்பட்டு வந்தது. ஆனால், இந்தச் செய்தி முற்றிலும் பொய்யானது என்றும் வதந்தி என்றும் தகுந்த ஆதாரங்களுடன் உண்மைத் தன்மை வெளிவந்துள்ளது.
ரயிலில் மாட்டிக்கொண்டு அடி வாங்கிய நபர், கிரிக்கெட் வீரர் ஹசன் அலியின் முகச் சாயலில் இருக்கும் வேறு ஒரு நபர் ஆவர். வெறும் உருவ ஒற்றுமையை வைத்துக்கொண்டு, உண்மை என்னவென்று ஆராயாமல் சிலர் பரப்பிய இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது. விளையாட்டு வீராங்கனைகள் மற்றும் பிரபலங்கள் குறித்த போலிச் செய்திகளைப் பகிர்வதற்கு முன் அதன் உண்மைத் தன்மையைச் சரிபார்ப்பது அவசியம் என்பதற்கு இந்தச் சம்பவமே சான்றாக அமைந்துள்ளது.
