பஞ்சாப் மாநிலம் பட்டியாலா மாவட்டத்தில் உள்ள  காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், 17 வயது சிறுமி ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த இந்தத் தாக்குதல் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

 

 

View this post on Instagram

 

A post shared by India24Bulletin (@india24bulletin)

வெள்ளிக்கிழமை காலை சுமார் 10 மணி அளவில் இந்தத் துயரச் சம்பவம் நடந்துள்ளது. அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், எதிர்பாராத விதமாக அந்தச் சிறுமியை கூர்மையான ஆயுதத்தைக் கொண்டு கடுமையாகத் தாக்கியுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த அச்சிறுமி உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தத் தாக்குதல் சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி  கேமராவில் அப்படியே பதிவாகியுள்ளது. அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி, காண்போரைக் பதற வைத்தன.

இந்த வீடியோ ஆதாரத்தைக் கொண்டு, சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை அடையாளம் காணும் பணியில் பட்டியாலா காவல்துறையினர் தீவிரமாக இறங்கினர்.
சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் துரிதமாகச் செயல்பட்ட காவல் நிலையப் போலீஸார், தாக்குதல் நடத்திய நபரை சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள்ளாகவே அடையாளம் கண்டு கைது செய்தனர். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், தாக்குதலுக்கான பின்னணி என்ன என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.