தென்காசி மாவட்டத்தில் நடந்த கொடூரமான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. 57 வயதான சந்திரன் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு, கடந்த 2023-ஆம் ஆண்டு தனது மனைவி சித்ராவை கொடூரமாக படுகொலை செய்தார். இந்த கொலை சம்பவம் தென்காசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சித்ராவின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சந்திரன், நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைத்ததைத் தொடர்ந்து சிறையில் இருந்து வெளியே வந்தார். வெளியில் வந்த பின்னரும், அவர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார். இந்நிலையில், தனது மன உளைச்சலை தாங்க முடியாமல் அவர் தற்கொலை செய்துகொண்டார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், சந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை சம்பவம் குறித்து காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
