ராஜஸ்தானின் புகழ்பெற்ற கோகாமேடி திருவிழாவில் எடுத்ததாக கூறப்படும் ஒரு கொடூரமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பலவீனமடைந்த ஒட்டகத்தை ஒரு நபர் மரக் கோலால் அடித்து, அதனை எழுந்திருக்க வைக்க முயற்சிக்கிறார். அந்த விலங்கு சத்தமிடும் விதமாக துன்புறுத்தப்பட்டு, கடைசியாக அதிர்ச்சியுடன் நின்று கொண்டிருந்ததும் காணப்படுகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், அந்த நபரையும் விழா நிர்வாகத்தையும் கடுமையாக கண்டித்து, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோருகின்றனர்.

https://www.instagram.com/reel/DOIg3ruiArL/?igsh=MXhzOTV4dTFpbGNjOQ==

இந்த கொடூர சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. “அவன் எழுந்திருக்க உதவி கைகள் போதும். அடிக்க வேண்டியதில்லை. “ஒட்டகம் ஒரு இயந்திரம் இல்லை… அதுவும் உணர்வுகளுடன் கூடிய ஒரு உயிரே! இந்த மரியாதையற்ற நடத்தை பாரம்பரியமல்ல, இது வெளிப்படை கொடுமை,” என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வீடியோவை பார்த்த பலரும் கடும் விமர்சனங்களுடன் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். “இது மனதைத் துளைக்கும் ஒரு காட்சி. அருகில் இருந்தவர்கள் அதில் மகிழ்ந்திருப்பதும் வேதனைகரமானது,” என ஒருவர் கூற, மற்றொருவர் “இந்த நபரின் மீது போலீசில் புகார் செய்யுங்கள். விலங்குகளுக்கே இவ்வளவு கொடுமையா?” என கேள்வி எழுப்பியுள்ளார். “’இவனையும் இப்படித்தான் அடிக்கணும், அப்ப தான் வலியைக் புரிஞ்சிக்குவான்’” என மற்றொரு நெட்டிசன் கோபமாக பதிவு செய்துள்ளார்.