சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு சவரன் 1,06,960 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13,370 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் அதிகரித்து ஒரு கிராம் 14,585 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,16,680 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் 245 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,45,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.