தமிழ்நாடு மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சரத்குமார் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது சேப்பாக்கம் மைதானத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், அவர் வெள்ளை நிறப் பொடி போன்ற ஒரு பொருளை 500 ரூபாய் நோட்டிலும், ஏடிஎம் கார்டிலும் வைத்து நுணுக்கி எடுப்பது போன்ற காட்சிகள் சித்தரிக்கப்பட்டு, தவறான தகவல்கள் பரப்பப்பட்டன. இந்த விவகாரம் பரவியதே அடுத்து, அமைச்சர் சரத்குமார் தனது மனைவியுடனும் குடும்பத்தினருடனும் ஒரு வீடியோவை வெளியிட்டு இதற்குத் தெளிவான விளக்கம் அளித்துள்ளார்.
தங்களது குழந்தைக்கு ஒன்றரை வயதாக இருக்கும் போது குடும்பத்துடன் கிரிக்கெட் போட்டி பார்க்கச் சென்றதாக அமைச்சரும் அவரது மனைவியும் அந்த வீடியோவில் விளக்கியுள்ளனர். அப்போது குழந்தைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், மருத்துவரின் அறிவுரைப்படி ஒரு மாத்திரையை இடித்துப் பாலில் கலந்து கொடுப்பதற்காகவே அந்தப் பொருளை அப்படி நுணுக்கியதாகக் கூறியுள்ளனர்.
கடுமையான கட்டுப்பாடுகள் நிறைந்த பொது மைதானத்தில், குழந்தையைக் கையில் வைத்துக் கொண்டு யாராவது இப்படிச் செய்வார்களா என்று கேள்வி எழுப்பியுள்ள அவர்கள், திட்டமிட்டு நற்பெயருக்குக் கலங்கம் விளைவிக்கவே இந்த வீடியோவைத் தவறாகப் பரப்புவதாக வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
“போதை பொருள் பயன்படுத்தினேனா?..”
அமைச்சர் சரத்குமார் போதைப் பொருள் பயன்படுத்துவது போன்ற வீடியோ வைரல்.. அமைச்சர் சரத்குமார் விளக்கம்#Minister | #SarathKumar | #ViralVideo | #PolimerNews pic.twitter.com/48Cd6MRIOL
— Polimer News (@polimernews) June 26, 2026
- “>
மேலும், இந்த அவதூறைப் பரப்புபவர்கள் மீது கடுமையான சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதுபோன்ற பொய்ப் பிரச்சாரங்களை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
