“அயர்லாந்து மாதிரி ஒரு பலவீனமான டீம்கிட்ட வரலாற்றுல முதல் முறையா கேவலமா தோத்துட்டோம் ; ஆனா ஒரு கேப்டனா எனக்கு இது ஒரு நல்ல தொடக்கம்தான், ஏன்னா ஆரம்பத்துல நம்ம பந்துவீச்சாளர்கள் நல்லாத்தானே போலிங் போட்டாங்க!” என்று நடந்த முதல் டி20 போட்டியில் அயர்லாந்திடம் இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த பிறகு, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கூறியது ,
டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த இந்திய அணி, அயர்லாந்தை 51 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என அசுர வேகத்தில் சுருட்டினாலும், மிடில் ஓவர்களில் விக்கெட் எடுக்க முடியாமல் சொதப்பியதால் அயர்லாந்து 182 ரன்கள் என்ற மெகா ஸ்கோரை எட்டியது.
பதிலுக்கு ஆடிய இந்திய அணியில் அபிஷேக் சர்மா 20 பந்துகளில் அசுர வேகத்தில் அரைசதம் அடித்து மிரட்டினாலும், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஒட்டுமொத்தப் போட்டியையும் அப்படியே எதிரணியிடம் தாரை வார்த்தனர்;
இறுதியில் இந்திய அணி 148 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வரலாற்றுத் தோல்வியைச் சந்தித்தது. இந்த தோல்விக்கு பந்துவீச்சாளர்களின் மிடில் ஓவர் சொதப்பல்கள்தான் காரணம் என ஸ்ரேயாஸ் ஐயர் மறைமுகமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
