சமூக வலைதளங்களில் விலங்குகளின் வீடியோக்கள் எப்போதும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும். அந்த வகையில், மலைப்பாங்கான பகுதியில் சாலை ஓரத்தில் அமர்ந்திருந்த குரங்கு ஒன்றிற்கு பெண் ஒருவர் அன்போடு உணவளிக்கச் சென்றபோது நடந்த ஒரு சுவாரஸ்யமான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

எந்த அச்சமும் இன்றி அந்தப் பெண் குரங்கிற்கு உணவளிக்க நெருங்கிச் சென்றார். குரங்கும் அமைதியாகத் தான் இருந்தது, ஆனால் எதிர்பாராதவிதமாக அந்தப் பெண் உணவை நீட்டிய அடுத்த நொடியே, குரங்கு அவரைப் படாரென்று அறைந்துவிட்டது. இந்தச் சம்பவத்தைக் கண்டு அந்தப் பெண் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்றார்.

இந்த வீடியோவைப் பார்த்த பல நெட்டிசன்கள், இது வேடிக்கையாக இருந்தாலும் வனவிலங்குகளின் நடத்தையை எப்போதும் கணிக்க முடியாது என்று எச்சரிக்கையுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர். குரங்கின் இந்தத் திடீர் கோபத்தை சிலர் நகைச்சுவையாகவும், சிலர் அதை ஒரு பாடமாகவும் பதிவிட்டு வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Tika Jaisi (@tika_jaisi_52)

“>

அதிர்ஷ்டவசமாக இந்தப் பெண்ணிற்கு எந்தப் பெரிய காயமும் ஏற்படவில்லை. சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வரும் இந்த வீடியோ, காட்டிலுள்ள விலங்குகளிடம் பழகும்போது கவனமாக இருக்க வேண்டும் என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.