மகாராஷ்டிர மாநிலம் புனேவில், நடுரோட்டில் தவறாக நிறுத்தப்பட்டிருந்த பிரம்மாண்ட எசுயூவி (SUV) கார் ஒன்றால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அந்த வழியே செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளான நிலையில், அங்கு வந்த ஒரு ஜிம் வாலிபர் செய்த அதிரடி காரியம் ஒட்டுமொத்த டிராஃபிக்கையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

காரை நகர்த்த ஓனர் இல்லாத சமயத்தில், சற்றும் யோசிக்காத அந்த இளைஞர், தனது அசாத்திய உடல் வலிமையைப் பயன்படுத்தி அந்தப் பெரிய காரின் ஒரு பகுதியை வெறும் கையாலேயே அப்படியே அலாக்காகத் தூக்கி ரோட்டின் ஓரத்திற்கு நகர்த்தி வைத்துள்ளார். ​அங்கிருந்த வாகன ஓட்டிகள் இந்த நம்பமுடியாத காட்சியைத் தங்களது மொபைல் போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பகிர, அது தற்போது காட்டுத்தீயாய் பரவி மில்லியன் கணக்கான வியூஸ்களைக் குவித்து வருகிறது.

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும், “இத்தனை நாளா ஜிம்முக்கு போய் ‘லெக் டே’ (Leg Day) வொர்க்அவுட் பண்ணது இன்னைக்குதான் சரியான இடத்துல கை கொடுத்திருக்கு” என்று தங்களது சுவாரசியமான கருத்துக்களைப் பதிவிட்டு லைக்ஸ்களை குவித்து வருகின்றனர். தவறான பார்க்கிங்கிற்கு சண்டை போடாமல், தனது ஜிம் வலிமையைக் காட்டி டிராஃபிக்கை கிளியர் செய்த அந்தப் புனே வாலிபரின் செயல் தற்போது இணையத்தில் மரண மாஸ் ட்ரெண்டிங்காக மாறியுள்ளது.