சத்தீஷ்கர் மாநிலம் ஜாஷ்பூர் மாவட்டம் ஜுருதந்த் கிராமத்தில் விநாயகர் சிலைகளை நீரில் கரைப்பதற்காக 100-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்றனர்.
இந்நிலையில், திடீரென ஒரு சொகுசு கார் அந்தக் கூட்டத்துக்குள் புகுந்து மோதியதில் விபின் பிரஜாபதி (17), அரவிந்த் கெர்கெட்டா (19), கீரோவதி யாதவ் (32) ஆகிய மூவரும் உயிரிழந்தனர். மேலும் 22 பேர் பலத்த காயங்களுடன் சுர்குஜா மாவட்டம் அம்பிகாபூர் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குடிபோதையில் காரை ஓட்டியதாக கூறப்படும் சுக்சாகர் வைஷ்ணவ் (40) என்பவர் கைது செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை தொடர்ந்து அமைதியாக நடந்து வந்த மக்கள் ஊர்வலத்தில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
