ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூரில் குழந்தைகள் உயிருடன் விளையாடப்பட்ட அதிர்ச்சி சம்பவம் ஒன்று நெட்டிசன்களை உலுக்கியுள்ளது. ரூப்பாஸ் பகுதியில் செப்டம்பர் 2ஆம் தேதி ஒரு தனியார் பள்ளி பேருந்து, 55க்கும் மேற்பட்ட மாணவர்களை ஏற்றிக்கொண்டு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய கம்பீர் ஆற்றைக் கடந்து சென்ற திகில் காட்சிகள் வீடியோவாக பரவி வருகிறது. வகுப்பு 5 முதல் 8 வரை உள்ள மாணவர்கள் பேருந்தில் இருந்தனர் என கூறப்படுகிறது.

மரைத்தா கிராமத்தில் உள்ள மேம்பாலம் வழியாக குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து செல்லும் போது, ஆற்றின் வெள்ளப்பெருக்கு இருந்த போதிலும், பேருந்து டிரைவர் ஆற்றில் வாகனத்தை செலுத்தியுள்ளார். இந்த வீடியோவை அங்குள்ள கிராம மக்கள் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பகிர, அது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட பேருந்து, மில்சாவா கிராமத்தில் உள்ள ராதா ஸ்வாமி பப்ளிக் பள்ளிக்கு சொந்தமானது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், பள்ளி நிர்வாகி கிரிராஜ் சர்மா, காலை நேரத்தில் அற்றில் வெள்ளப்பெருக்கு இல்லை, பிற்பகலில் நீர்மட்டம் உயர்ந்தது என்றும், டிரைவர் தன்னிச்சையாக முடிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளதோடு, இச்சம்பவம் தற்போது விசாரணையில் உள்ளது. கம்பீர் ஆற்றில் இந்த அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட காரணமாக, வங்காள விரிகுடாவில் உருவான குறைந்த மழை அழுத்த மண்டலம் காரணமாக ராஜஸ்தானில் கடந்த சில நாட்களாக கனமழை தொடர்வதையும், பாரத்பூரில் மிதமான மழைக்கான IMD எச்சரிக்கையும் குறிப்பிடத்தக்கது.