ஜவான் திரைப்படம் ரூ 1000 கோடி வசூலை அடையும் பயணத்தில் வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கிறது.

தளபதி விஜய் அவர்களை வைத்து இயக்கிய பிகில் திரைப்படத்திற்கு பிறகு பாலிவுட் சென்ற இயக்குனர் அட்லி இந்தியாவின் உச்ச நட்சத்திரமான ஷாருக்கான் அவர்களை வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கி அது வெளியாகி விமர்சன ரீதியாகவும்,  வசூல் ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்று சாதனை படைத்து வருகிறது. இயக்குனர் அட்லி அவர்களின் படங்களில் அதிகமான கலெக்ஷன் செய்த படமாகவும்  ஜவான் அமைந்துள்ளது.

அதேபோல் ஜவான் திரைப்படம் பான்  இந்தியா திரைப்படமாக வெளியானதால், அதன் வரவேற்பை கண்டு ரூபாய் ஆயிரம் கோடி வசூலை இத்திரைப்படம் ஈட்டும்  என சினிமா விமர்சகர்கள்  பலரால் எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில், படம் வெளியான 9 நாட்களில் ரூபாய் 735 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இனி வரக்கூடிய காலங்களில் கண்டிப்பாக ஜவான்  திரைப்படம் அமோக வசூலை பெற்று ஆயிரம் கோடி வசூல் பெற்ற திரைப்படங்களின் பட்டியலில்  இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.