நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற ‘ஜனநாயகன்’ திரைப்படத்தில், தற்போது புதிய காட்சிகள் சேர்க்கப்பட்டு மீண்டும் திரையரங்குகளில் ரசிகர்களுக்கு விருந்தளிக்கத் தொடங்கியுள்ளன.
இப்படத்தில் விஜய், முதல்வர் கதாபாத்திரத்தில் தோன்றும் காட்சிகள் மற்றும் அவர் சட்டப்பேரவையில் செய்த சைகை செய்து பேசும் முக்கியக் காட்சிகள் தற்போது இணைக்கப்பட்டுள்ளன. இது ரசிகர்களைப் பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த புதிய மாற்றங்கள் குறித்துப் படக்குழுவினர் வெளியிட்டுள்ள தகவல், திரையரங்குகளில் மீண்டும் ஒருமுறை வசூல் வேட்டை நடத்துவதற்கான திட்டமாகவே பார்க்கப்படுகிறது. குறிப்பாக, விஜய் கோட் சூட் அணிந்து முதல்வராகத் கம்பீரமாகத் தோன்றும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
Raavanamavan daa for a reason 🔥#JanaNayaganFromJuly23
The Hon’ble Chief Minister @actorvijay @TheKVNofficial @KvnProductions #HVinoth @hegdepooja @anirudhofficial @thedeol @_mamithabaiju @Jagadishbliss @LohithNK01 @RamVJ2412 @TSeries pic.twitter.com/zTC6EegRkj
— KVN Productions (@KvnProductions) July 20, 2026
ஏற்கனவே படத்தில் இருந்த அரசியல் அழுத்தத்தை, இந்த புதிய காட்சிகள் இன்னும் கூட்டியுள்ளதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே வெற்றி நடைபோட்டு வரும் இப்படத்தில், இத்தகைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது விஜய் ரசிகர்களைத் திரையரங்குகளுக்கு மீண்டும் ஈர்க்கும் ஒரு உத்தியாகவே கருதப்படுகிறது.
சட்டப்பேரவை பின்னணியில் விஜய் பேசும் காட்சிகள், தற்போதைய அரசியல் சூழலோடு ஒத்துப்போவதாக ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர். இத்தகைய அதிரடி மாற்றங்கள் படத்திற்குப் புதிய உயிர் கொடுத்துள்ள நிலையில், திரையரங்குகளில் மீண்டும் கூட்டம் அலைமோதுகிறது.
