“சீனியர் பிளேயர்ஸ் வர்ற வரைக்கும் அபிஷேக் சர்மாவையும் ஜெய்ஸ்வாலையும் ஏதோ தற்காலிக ஆளா வெச்சுக்கிட்டு அவங்க லைஃபோட விளையாடாதீங்க.. சீனியர் வந்ததும் தூக்கி பெஞ்ச்ல உட்கார வச்சா, அந்தப் பசங்க அப்புறம் எப்படி பயமில்லாம அதிரடியா ஆடுவாங்க?”

என்று பிரபல ஸ்போர்ட்ஸ் யூடியூப் சேனல் நேர்காணலில் கலந்துகொண்ட இந்திய அணியின் முன்னாள் மாஸ் ஹீரோ யுவராஜ் சிங், தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு வியூகத்தையும் கௌதம் கம்பீர் தலைமையிலான டிரஸ்ஸிங் ரூம் கலாச்சாரத்தையும் மிகக் காரசாரமாகக் கிழித்துத் தொங்கவிட்டுள்ளார்.

இளம் வீரர்களைக் கையாளுவதில் அணி நிர்வாகம் காட்டும் இந்தத் தெளிவற்ற போக்கை வன்மையாகக் கண்டித்துள்ள அவர், 2027 உலகக்கோப்பைக்கான நிஜமான ப்ளான் உங்களிடம் இருந்தால், அபிஷேக் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருக்குத் தொடர்ச்சியான நீண்ட கால வாய்ப்புகளை வழங்கித் தாங்கிப் பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

“அன்று சவுரவ் கங்குலி என் மீது நம்பிக்கை வைத்துத் தொடர் வாய்ப்புகளைக் கொடுத்துத் தோள் கொடுத்ததால் தான் என்னால் யுவராஜ் சிங்காக மாற முடிந்தது; அதைவிட்டுவிட்டு இளம் வீரர்களை வெச்சு இப்படி மியூசிக்கல் சேர் விளையாடுவதை இந்த மேனேஜ்மென்ட் உடனே நிறுத்த வேண்டும்!” என்று யுவராஜ் சிங் ஆவேசமாகப் பேசியிருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது.