பாலிவுட்டின் பிரபல நடிகர் சல்மான் கான், சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற அரசு விழா ஒன்றில் கலந்து கொண்டார். இந்த விழாவில் பங்கேற்ற அவரது தோற்றமும், முகத்தில் தெரிந்த மாற்றங்களும் தான் தற்போது திரையுலகிலும் சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. பல தசாப்தங்களாகத் தனது ஸ்டைலான தோற்றத்தாலும், அதிரடி காட்சிகளாலும் ரசிகர்களைக் கவர்ந்து வந்த சல்மான் கானின் இந்த புதிய வடிவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மும்பையில் நடைபெற்ற விழாவில் சல்மான் கான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட  போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின. அதில், 60 வயதை நெருங்கும் சல்மான் கானின் முகத்தில் மிகுந்த சோர்வும், வயோதிகத்தின் அடையாளங்களும் தெளிவாகத் தெரிவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். எப்போதும் சுறுசுறுப்பாகக் காணப்படும் அவரது முகத்தில் தெரிந்த இந்த மாற்றத்தைக் கண்டு ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.

வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் தங்களது கவலைகளைப் பதிவிட்டு வருகின்றனர். “எங்கள் காலத்தின் மிகவும் அழகான கதாநாயகனை இப்படிப் பார்க்கும்போது மனதுக்குக் கஷ்டமாக இருக்கிறது”, “அவரது கண்களில் சோர்வு தெளிவாகத் தெரிகிறது, அவருக்கு ஏதேனும் உடல்நலக்குறைவா?” எனப் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். மேலும் சிலர், “வயதும் இளமையும் யாருக்கும் நிரந்தரமில்லை” என்றும், “அவரது ஆரோக்கியத்திற்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்” என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

மேலும் இந்த விமர்சனங்களுக்கு சல்மான் கான் அதிரடியாக பதிலடி கொடுத்துள்ளார் அதாவது உங்கள் உடல் நலம் சரியாக இருக்கிறதா என்று கேட்டதோடு ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.