நடிகர் விஜய்யை ஒருமையில் பேசியதாக, சமூக வலைதளத்தில் இயக்குநர் மிஷ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் படத்தை விஜய் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். சமீபத்தில் பேட்டி அளித்த இயக்குநர் மிஷ்கின், ‘லியோ’ படத்தை தம்பி விஜய் பார்த்தான், நன்றாக உள்ளதாக பாராட்டினான் என மிஷ்கின் பேசியிருந்தார். இதனை கண்டித்த விஜய் ரசிகர்கள், ஒருமையில் பேசும் லெவலில் மிஷ்கின் இல்லை எனவும், விஜய்தான் வருங்கால முதல்வர் என்பதால் பொது இடத்தில் விஜயை பற்றி பேசும்போது பார்த்து பேசுமாறு அறிவுரை கூறி வருகின்றனர்.