பெங்களூரு விமான நிலையத்தில் ஒரு மணி நேரத்திற்குள் இரண்டு பேர் தன்னிடம் மோசடியில் ஈடுபட முயன்றதாக, பயணி ஒருவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோவுடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அந்த நபர் தனது பதிவில், “முதலில் ஒரு நபர் வந்து ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய எனது செல்போனைத் தருமாறு கேட்டார்.

பின்னர் மற்றொருவர், தன்னிடம் இருந்த போர்டிங் பாஸில் உள்ள QR கோடை ஸ்கேன் செய்து பணம் செலுத்த உதவுமாறு கேட்டார். சந்தேகமடைந்த நான் அவர்களைக் கண்டித்தவுடன், இருவரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

செல்போனை அந்நியர்களிடம் கொடுப்பதைத் தவிருங்கள், QR கோடு ஸ்கேன் செய்யச் சொல்பவர்களின் பேச்சைக் கேட்டு ஏமாறாதீர்கள்” என்று கூறியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பல இணைய பயனர்கள், தில்லி மற்றும் மும்பை விமான நிலையங்களிலும் இதேபோன்ற மோசடி சம்பவங்களை தாங்கள் சந்தித்துள்ளதாகத் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Ranvijay Vlogs (@ranvijayy_vlogs)

“>

விமான நிலையங்கள் போன்ற பொது இடங்களில் அறிமுகம் இல்லாத நபர்கள் உதவி கேட்பதாகக் கூறி செல்போனைப் பெற்று, அதன் மூலம் நிதி மோசடிகளில் ஈடுபடுவது அதிகரித்துள்ளதால், பயணிகள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்த சம்பவம் எச்சரித்துள்ளது.