மும்பையின் உயிர்நாடியாகக் கருதப்படும் புறநகர் ரயில் சேவையில், ஓடும் ரயிலின் கதவருகே அமர்ந்து சில இளைஞர்கள் மது அருந்தும் அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை மும்பையிலிருந்து விரார் நோக்கிச் சென்ற ரயிலில் இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. ரயிலின் கதவருகே அமர்ந்து மது அருந்துவதுடன், உணவுகளையும் வைத்துக்கொண்டு அங்கு ஏதோ பார்ட்டி நடத்துவது போன்ற அந்த வீடியோ, சக பயணிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது பயணிகளின் பாதுகாப்பிற்கு விடுக்கப்பட்ட ஒரு பெரிய சவாலாகப் பார்க்கப்படுகிறது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கும் ரயில்களில், இத்தகைய பொறுப்பற்ற செயல்கள் பெண்களுக்கும், முதியவர்களுக்கும் பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளன.
ஏற்கனவே ரயில்களில் நிலவும் கடும் நெரிசலுக்கு மத்தியில், இத்தகைய அத்துமீறல்களைத் தடுக்க ரயில்வே நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் தவறிவிட்டார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
मुंबई लोकल की बार? धावत्या ट्रेनमध्ये तरुणांची मद्यपार्टी, व्हिडिओ व्हायरल#mumbai #mumbailocaltrains #maharashtra #viralvideo #MumbaiLocal #MiraBhayander #MumbaiLife #SpiritOfMumbai #westernline pic.twitter.com/ba0ialV73X
— Mahaenews (@mahae_news) June 22, 2026
“>
சம்பந்தப்பட்ட இளைஞர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பயணிகள் பாதுகாப்பான முறையில் பயணம் செய்வதை உறுதி செய்ய ரயில்வே நிர்வாகம் இன்னும் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
