“கட்சியை ஆரம்பத்துல இருந்து கஷ்டப்பட்டு வளர்த்த எங்க பதவியைப் பிடுங்கி, நேத்து மாற்றுக்கட்சியில இருந்து வந்தவங்களுக்குக் கொடுக்கப் பார்க்குறீங்களே, இது என்ன நியாயம்? வரப்போற அமைச்சரவை மாற்றத்துலயாவது எங்களுக்குப் பதவி கிடைக்குமா, இல்ல நாங்க இப்படியேதான் கிடக்கணுமா!”
என்று தமிழக ஆளுங்கட்சியான தவெகவின் சீனியர் மாவட்டச் செயலாளர்கள் தலைமைக்கு எதிராகக் கொதித்தெழுந்து போர்க்கொடி தூக்கியிருப்பது கோட்டை வட்டாரத்தில் மாபெரும் அரசியல் பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது.
தவெகவுக்கு மாற்றுக்கட்சிகளில் இருந்து வந்த வி.ஐ.பி.க்களுக்குப் பொறுப்புகளை வழங்குவதற்காகக் கட்சியின் மாவட்டங்களை உடைத்து, ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என நியமிக்கத் தலைமை ரகசியத் திட்டம் தீட்டி வருவதாக வெளியான தகவலே இந்த உட்கட்சி மோதலுக்கு காரணமாக அமைந்துள்ளது;
தங்களுக்கு உடனடியாகப் பொறுப்புகளை அறிவிக்க வேண்டும் என மாற்றுக்கட்சி வி.ஐ.பி.க்கள் ஒருபுறம் நெருக்கடி கொடுக்க, சீனியர்கள் மறுபுறம் ருத்ரதாண்டவம் ஆடுவதால் அதிர்ச்சியடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய், உளவுத்துறையின் ரகசிய எச்சரிக்கை அறிக்கையின்படி, புதிய பொறுப்புகளை வழங்குவதை தற்காலிகமாகத் தள்ளிவைக்கக் கோரி அவசர உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த விசித்திர உட்கட்சிப் பூசலால் தவெகவின் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் அடியோடு முடங்கியுள்ளதுடன், வரவிருக்கும் அமைச்சரவை மாற்றத்தின் போது சீனியர்களின் அதிருப்தியைச் சமாளிக்க முதலமைச்சர் என்ன மாதிரியான மாஸ்டர் பிளான் போடப் போகிறார் என்ற விவாதம் தற்பொழுது அரசியல் களத்தை அசைத்து வருகிறது.
