“சிலர் சும்மா மேடையில ஏறிப் பேசுற மாதிரி நான் ஒன்னும் நேத்து ஷூட்டிங் ஸ்பாட்ல இருந்து கிளம்பி வந்து இன்னைக்கு முதலமைச்சராகல; அரசியலுக்கு வர்றதுக்கு முன்னாடியே மீனவர் கஷ்டம், ஜல்லிக்கட்டுப் போராட்டம், ஸ்டெர்லைட் கொடுமைன்னு மக்களுக்காகக் களம் இறங்கி போராடிட்டுதான் இந்த நாற்காலியில வந்து உட்கார்ந்திருக்கேன் !”

என்று தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான ஜோசப் விஜய் அவர்கள் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்து ஆக்ரோஷமாக முழங்கியிருப்பது கோட்டை வட்டாரத்தை அடியோடு அதிர வைத்துள்ளது.

சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய அவர், தாங்கள் மக்கள் நலத் திட்டங்களை நீண்ட காலமாகச் செய்து வருவதைச் சுட்டிக்காட்டியதுடன், ஈழத்தமிழர் படுகொலையைக் கண்டித்துப் போராட்டங்களை நடத்தியதையும், திரைப்படங்கள் மூலம் துணிச்சலாக அரசியல் பேசியதால் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட  நெருக்கடிகளையும் எதிர்கொண்டுதான் இந்த நிலைக்கு வந்துள்ளதாகத் தரவுகளுடன் மார்தட்டியுள்ளார்; முதலமைச்சரின் இந்த அதிரடிப் பேச்சு அறிவாலயப் பாசறையை நிலைகுலைய வைத்துள்ளது.