“முதலமைச்சர் விஜய் இன்னைக்குச் சட்டமன்றத்துக்கு ஒரு முழு ஸ்கிரிப்ட்டை எடுத்துட்டு வந்து, அதை அப்படியே மனப்பாடம் பண்ணி ஒப்பிச்சுட்டுப் போறாரு ; கேள்விகளுக்குப் பதில் சொல்லாம சட்டமன்றத்தையே ஒரு சினிமா ஷூட்டிங் ஸ்பாட்டா மாத்தி  நடிக்க ஆரம்பிச்சுட்டாங்க!” என்று திமுக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆக்ரோஷமாகப் பேட்டியளித்திருப்பது தமிழக அரசியலில் மாபெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

சட்டப்பேரவை வளாகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், முதல்வர் விஜய் மக்களின் கேள்விகளுக்குப் பொறுப்பாகப் பதிலளிக்காமல் சோசியல் மீடியாவில் ‘இன்ஸ்டா ரீல்ஸ்’ (Insta Reels) போடுவதற்காகத் திட்டமிட்டுப் பேசி வருவதாகச் சாடினார்;

சபாநாயகர் டைரக்டர் போலவும், அமைச்சர்கள் அசிஸ்டன்ட் டைரக்டர் போலவும் செயல்பட்டுச் சபையை ஒரு விசித்திர நாடக மேடையாக மாற்றிவிட்டதாகக் குற்றம் சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர், விரைவில் சட்டமன்றத்திற்குள் கேரவேன், மேக்கப் மேன், ஸ்டண்ட் மாஸ்டர் எல்லாம் வந்துவிடுவார்கள் என  பேசினார்.