தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் வழக்கம்போல குட்டிக்கதை கூறியதற்கு, முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மிகக் கடுமையான வார்த்தைகளால் கண்டனம் தெரிவித்துள்ளார். “சினிமாவில் பிளாக் டிக்கெட் விற்பனையைக்கூட தடுக்க முடியாத உத்தமர்தான் இன்று சட்டமன்றத்தில் உட்கார்ந்து கொண்டு ஊழலைப் பற்றிப் பேசுகிறார்” என முதலமைச்சரை நேரடியாகச் சாடினார். முதலமைச்சரின் இந்த பேச்சு வெறும் அரசியல் நாடகம் என்றும், நிஜமான பிரச்சினைகளில் இருந்து மக்களை திசைதிருப்பவே அவர் அவையில் கதைகளை அளந்து விடுகிறார் என்றும் கடுமையாகக் குற்றம் சாட்டினார்.

​மேலும், அவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுந்து நின்று பேசும்போது, அதற்குப் பதிலளிக்க முடியாமல் ஆளுங்கட்சி அமைச்சர்கள் தொடர்ந்து குறுக்கீடு செய்து ரகளையில் ஈடுபடுவதாக அவர் சுட்டிக்காட்டினார். இது ஆளுங்கட்சியின் பயத்தையே காட்டுவதாகக் குறிப்பிட்ட சிவசங்கர், எதிர்க்கட்சியின் நியாயமான கேள்விகளை எதிர்கொள்ளத் துப்பில்லாமல் அமைச்சர்களை முன்னிறுத்தி முதலமைச்சர் விஜய் தப்பி ஓடப் பார்க்கிறார் என ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.