ஜெர்மனியில் 15 ஆண்டுகள் வசித்த பிறகு, மகாராஷ்டிராவின் புனே நகரத்திற்குத் திரும்பிய இந்தியப் பெண் ஒருவர், தான் எதிர்கொண்ட ‘ரிவர்ஸ் கல்ச்சுரல் ஷாக்’ எனப்படும் எதிர்பாராத கலாச்சார மாற்றங்கள் மற்றும் சவால்கள் குறித்து இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும் ஜெர்மனியின் மிகத் துல்லியமாக ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பு முறைகளில் பழகிவிட்டு, இந்தியாவின் சூழ்நிலைக்கு ஏற்ப நெகிழ்வுத்தன்மையுடன் மாற்றியமைத்துக் கொள்ளும் முறைக்கு மாறுவதில் உள்ள அனுபவங்களை அவர் விவரித்துள்ளார். இரண்டு நாடுகளின் வாழ்க்கை முறைகளுக்கும் உள்ள சாதக, பாதகங்களை யாரையும் புண்படுத்தாத வகையில் அவர் ஒப்பிட்டுப் பேசியுள்ளார்.
‘Structured Systems To Flexible Jugad’: Woman Moves Back To India After 15 Years In Germany, Shares ‘Reverse Cultural Shock’ https://t.co/zx004FuWdV
“>
இதனால் இவரது இந்த எதார்த்தமான பகிர்வு சமூக வலைத்தளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளதுடன், நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். ஒரு நாட்டின் வாழ்க்கை முறை மற்றொன்றை விடச் சிறந்தது என்று கூறாமல், இரண்டு நாடுகளின் எதார்த்த நிலைகளையும் சமமாகப் பேசியதற்காகப் பாராட்டியுள்ளனர்.
மேலும், வெளிநாட்டிலிருந்து இந்தியா திரும்பிய பிறகு, தாய்நாட்டைப் பற்றி மிகவும் நேர்மறையாகவும் பக்குவமாகவும் பேசிய சிலரில் இவரும் ஒருவர் என்றும் மக்கள் தங்களது கருத்துக்களில் பதிவிட்டு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
