ஒரு அலுவலகத்தில் வெளியிடப்பட்ட விசித்திரமான மற்றும் கடுமையான சுற்றறிக்கை சமூக வலைத்தளங்களில் ஏற்படுத்தியிருக்கும் பெரும் விவாதத்தைப் பற்றியதாகும்.

மேலும் அந்த அலுவலக நோட்டீசில், ஊழியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மதிய உணவு நேரத்தை விட “1 நிமிடம்” கூடுதலாக எடுத்துக்கொண்டால் கூட, அதற்குப் பகரமாக “1 மணிநேரம்” கூடுதல் சம்பளம் இல்லாத உழைப்பை வழங்க வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஊழியர்களை “வேகமாகச் சாப்பிடுங்கள்” என்றும் அந்த அறிவிப்பு வற்புறுத்துகிறது. இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் தங்களது கடுமையான கண்டனங்களையும் குமுறல்களையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதனால் நிறுவனங்கள் ஊழியர்களின் வேலைத்திறனை மதிப்பிடாமல், இவ்வாறு ஒவ்வொரு நிமிடத்தையும் கணக்குப் பார்த்து மன உளைச்சலுக்கு ஆளாக்குவது முற்றிலும் தவறு என்றும், இது ஒரு பிசினஸ் நிறுவனம் போல இல்லாமல் கார்ப்பரேட் சிறைச்சாலை போலச் செயல்படுகிறது என்றும் மக்கள் விமர்சித்து வருகின்றனர்.