தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று நடைபெற்ற போது முதலமைச்சர். விஜய் எதிர்க்கட்சிகளின் அத்தனை கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுத்தார். குறிப்பாக டாஸ்மாக் நிதி சில கட்சி நிதிக்கு சென்றதாக முதல்வர் விஜய் குற்றம் சாட்டிய நிலையில் அது எந்த கட்சியின் பெயர் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பிய நிலையில் எந்த பிரச்சனை வந்தாலும் அதனை எதிர்கொள்ள தாங்கள் தயாராக இருப்பதாகவும் அந்த கட்சியின் பெயரை கூற வேண்டும் எனவும் சவால் விட்டார்.
அதோடு பொத்தம் பொதுவாக முதல்வர் விஜய் பேசுவதாக குற்றம் சாட்டிய உதயநிதி மற்றும் திமுக எம்எல்ஏக்கள் உடனடியாக சபையை விட்டு வெளியேறினார். தற்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார். அப்போது ஆளுநர் நிகழ்ச்சியில் இரண்டு முறை தேசிய கீதம் பாடப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் அதற்கு முதலமைச்சர் விஜய் கலைஞர் படத்திறப்பு விழாவின் போது இரண்டு முறை தேசிய கீதம் பாடப்பட்டதை சுட்டிக்காட்டி பதிலடி கொடுத்திருந்தார்.
இது தொடர்பாக பேசிய உதயநிதி முதலமைச்சர் விஜய்க்கு ப்ரோட்டோகால் தெரியவில்லை என்றார். அதாவது குடியரசு தலைவருக்கு என்று ஒரு புரோட்டோகால் உள்ளது. அதன் அடிப்படையில் தான் குடியரசுத் தலைவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் இரண்டு முறை தேசிய கீதம் பாடப்பட்டது. ஆனால் ஆளுநருக்கு அப்படி எந்த புரோட்டோ காலும் கிடையாது. இந்த புரோட்டோகால் கூட முதலமைச்சர் விஜய்க்கு தெரியாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது என்றார்.
மேலும் இதற்கு முன்பாக எம்எல்ஏ பல்லவி மற்றும் சென்னை மேயர் பிரியா இடையை குத்துவிளக்கு ஏற்றுவது தொடர்பான சர்ச்சையின் போது இந்த புரோட்டோகால் விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதாவது மேயர் பிரியா புரோட்டோகால் பற்றி அவர்களுக்கு தெரியவில்லை என்று கூறியிருந்தார்.
