தமிழக சட்டமன்றத்தில் ஊழல் மற்றும் கட்சி நிதி விவகாரம் தொடர்பாகப் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், எதிர்க்கட்சித் தரப்பை நோக்கி அதிரடியான கேள்விகளை எழுப்பியுள்ளார். உங்களுடைய கட்சியில் ‘பார்ட்டி ஃபண்ட்’ இல்லையா என்றும், அப்படியென்றால் எதற்காக உங்கள் மீது இத்தனை வழக்குகள் வந்தன என்றும் அவர் காரசாரமாக வினவினார். மேலும், ஒரு குறிப்பிட்ட குடும்பம் மட்டும் சுமார் 30,000 கோடி ரூபாயை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டதாக வேறு யாரும் கூறவில்லை, உங்களுடைய சொந்த நிதி அமைச்சரே ஆடியோவில் ஒப்புக்கொண்டுள்ளார் என ஆதாரத்தை சுட்டிக்காட்டி அவையை அதிர வைத்தார்.

​இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக வழக்குப்பதிவு செய்து, அந்த குறிப்பிட்ட ஆடியோவின் உண்மைத்தன்மையை முழுமையாக ஆராய தற்போதைய அரசு முன்வந்தால் உங்களுக்கு ஓகேவா என அமைச்சர் நிர்மல் குமார் ஓப்பனாகவே சவால் விடுத்துள்ளார். இந்த 30,000 கோடி ஊழல் ஆடியோ விவகாரம் மற்றும் வழக்குகள் குறித்த அமைச்சரின் இந்த அதிரடி பேச்சு, சட்டமன்றத்தில் பெரும் புயலை கிளப்பியதோடு ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி வட்டாரத்தில் கடுமையான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.