தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் கூறிய குட்டிக்கதைக்கு, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மிகக் கடுமையான வார்த்தைகளால் அதிரடி பதிலடி கொடுத்துள்ளார். முதலமைச்சரின் பதிலுரையில் எவ்வித ஆதாரமும் இல்லை என்றும், வெறும் சினிமா பாணி பஞ்ச் டயலாக்குகளை மட்டுமே நம்பி அவர் பேசியுள்ளார் என்றும் சாடியுள்ளார். மேலும், குட்டிக்கதை என்ற பெயரில் அவையில் உளறுவது சட்டமன்ற மாண்புக்கு எதிரானது எனக் குறிப்பிட்ட உதயநிதி, செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனைத் தேடும் மனைவியின் கதை ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்குமே நன்றாகத் தெரியும் என மறைமுகமாகத் தாக்கிப் பேசியுள்ளார்.

​இரு தலைவர்களுக்கும் இடையே வெடித்துள்ள இந்த நேரடி மோதல், தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போதைய ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்த முதலமைச்சருக்கு, எதிர்க்கட்சித் தலைவர் அவையிலேயே கொடுத்த இந்த மரண மாஸ் பதிலடி ஆளுங்கட்சி தரப்பைத் திணறடித்துள்ளதோடு, சமூக வலைதளங்களிலும் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது.