“நாங்க பேசி முடிச்சுட்டு சபாநாயகர் அவை நேரம் முடிஞ்சிருச்சுன்னு சொன்னதுக்கப்புறம் தான் வீட்டுக்கே கிளம்பிப் போனோம் , ஆனா  வீட்டுக்குப் போய் டிவி ஆன் பண்ணிப் பார்த்தா அங்க ஒரு  மந்திரி தனியா உக்காந்து பதில் சொல்லிட்டு இருக்காரு !”

என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்  பேரவையின் மரபு மீறல்கள் குறித்துக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஆளுங்கட்சிக்கு  நோக்கி கேள்வி எழுப்பினார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், ஆளுநர் சட்டசபைக்கு வரும்போது இரண்டு முறை தேசிய கீதம் இசைக்கப்பட்ட விசித்திர புரோட்டோகால் (Protocol) குளறுபடி குறித்துக் கேள்வி எழுப்பியதுடன், ஆதாரமே இல்லாமல் முந்தைய திமுக அரசு மீது டாஸ்மாக் ஊழல் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுவதாகவும் கொந்தளித்தார்; ஆளுங்கட்சியினர் இஷ்டத்திற்குப் பேசுவதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருக்க முடியாது என்பதால் தான் தாங்கள் அவையைப் புறக்கணித்து வெளியேறியதாகத் தெளிவுபடுத்தியுள்ளார்.