முதலமைச்சர் விஜய்யை இன்ஸ்டாகிராமில் நடிகை த்ரிஷா ‘அன்ஃபாலோ’ செய்துவிட்டார் என்றும், இந்த ஆண்டு பிறந்தநாளுக்கு அவர் வாழ்த்துச் சொல்லவில்லை என்றும் சோசியல் மீடியாவில் பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, த்ரிஷா நள்ளிரவிலேயே விஜய்யுடன் கேக் வெட்டி செம மாஸாகப் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ள கியூட் விபரம் ஒட்டுமொத்த கோலிவுட்டையும் நெகிழ வைத்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான விஜய்யின் பிறந்தநாளையொட்டி, நடிகை த்ரிஷா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நள்ளிரவு சரியாக ‘00.00’ மணிக்கு விஜய்யுடன் இருக்கும் அழகான புகைப்படம் ஒன்றை எக்ஸ்க்ளூசிவாகப் பகிர்ந்துள்ளார்.
அதில் இரண்டு அழகான கேக்குகளுக்கு நடுவே, முதலமைச்சர் விஜய் நாணத்துடன் சிரிக்க, த்ரிஷா அவரை ஆசையோடு பார்க்கும் அந்தப் புகைப்படத்துடன், “To the person who makes it all worth it, HBD” (எல்லாவற்றையும் அர்த்தமுள்ளதாக மாற்றும் அந்த உன்னதமான மனிதருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்) எனத் தனது இதயப்பூர்வமான வாழ்த்தை உருகி உருகிப் பதிவிட்டுள்ளார்.
நேற்று முழுக்க இவர்களுக்குள் ஏதோ மோதல் எனத் தங்களது சொந்தக் கற்பனையில் வதந்திகளைப் பரப்பி வந்த நெட்டிசன்களுக்கு, த்ரிஷாவின் இந்த நள்ளிரவு 12 மணி சர்ப்ரைஸ் போஸ்ட் ஒட்டுமொத்தமாக வாயடைக்கச் செய்துள்ளதோடு, இந்த கியூட் நியூஸ் கார்டு தற்போது சோசியல் மீடியாவில் விஜய்-த்ரிஷா ரசிகர்களால் பயங்கர வெறித்தனமாகக் கொண்டாடப்பட்டு, இணையத்தில் காட்டுத்தீயாய் ட்ரெண்டாகி வருகிறது.
