நீலகிரி மாவட்டம் குன்னூர் அருள்மிகு விநாயகர் திருக்கோவிலில் மல்டி லெவல் கார் பார்க்கிங் கட்டும் திட்டத்தை ரத்து செய்து தமிழ்நாடு அரசு தற்போது அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது ஒட்டுமொத்த அரசியல் மற்றும் ஆன்மிக வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கடந்த 2024-2025 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் சட்டமன்ற மானியக் கோரிக்கையின் போது குன்னூர் விநாயகர் கோவிலில் ₹15 கோடி மதிப்பீட்டில் மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
ஆனால், வெறும் 500 பேர் மட்டுமே வந்து செல்லக்கூடிய, முறையான அடிப்படை வசதிகள் மற்றும் போதிய வருவாய் இல்லாத இந்தத் திருக்கோவிலுக்கு இவ்வளவு பிரம்மாண்டமான கார் பார்க்கிங் திட்டம் தேவையா என்றும், இதற்காக வட்டியுடன் கூடிய கடனைப் பெற்று ஏன் வீண் செலவு செய்ய வேண்டும் என்றும் தவெக அரசின் அமைச்சர் ரமேஷ் சட்டமன்றப் பேரவையில் அதிரடியாகக் கேள்வி எழுப்பியிருந்தார்.
கடந்த ஆட்சியில் எடுக்கப்பட்ட இந்த விசித்திரமான முடிவை மறுபரிசீலனை செய்த தவெக அரசு, இத்திட்டம் துவங்கப்படாத சூழலில் இருப்பதைச் சுட்டிக்காட்டி அதன் கட்டுமானப் பணிகளுக்கான அரசாணையைத் தற்போது முழுமையாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
இந்துசமய அறநிலையத்துறையின் இந்த அதிரடி நடவடிக்கை தற்போது சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் மற்றும் அரசியல் கட்சியினரால் பயங்கர உக்கிரமாக விவாதிக்கப்பட்டு இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
