தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் பேசிய பஞ்ச் டயலாக் விவகாரம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் முதல்வர் விஜய்யை விமரிசித்துத் தனது எக்ஸ் (X) தள பக்கத்தில் வெளியிட்டுள்ள காரசாரமான பதிவு செம வைரலாகி வருகிறது.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விடுத்துள்ள அந்த அதிரடி அறிக்கையில், “சார் நான் ஒரு ஆக்ஷன் பண்ணிக்கலாமா!?” என்று விஜய்யின் சினிமா பாணியிலேயே ஆரம்பித்து, ‘நாளைய தீர்ப்பு’ திரைப்படம் தொடங்கி இன்று மக்களின் தீர்ப்பால் முதலமைச்சராக அரியணை ஏறியது வரை திரு. விஜய் அவர்களின் நடிப்பு நன்றாகவே வளர்ந்துள்ளது என்று வாழ்த்திவிட்டு, அதே வேளையில் பஞ்ச் டயலாக் பேசுவது, விசில் அடிப்பது, குட்டி கதை சொல்வது எனப் புனிதமான சட்டமன்றத்தை ஒரு சினிமா சூட்டிங் ஸ்பாட் (Shooting Spot) போல மாற்றுவது தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல என்று கறாராகக் குற்றம் சாட்டியுள்ளார்.
*சார் நான் ஒரு ஆக்க்ஷன் பண்ணிக்கலாமா!?*
நாளைய தீர்ப்பு தொடங்கி, இன்று மக்களின் தீர்ப்பால் முதல்வரானது வரை திரு.விஜய் அவர்களின் நடிப்பு நன்றாகவே வளர்ந்துள்ளது… வாழ்த்துக்கள்!!
ஆனால், பஞ்ச் டயலாக் பேசுவதும், விசில் அடிப்பதும், குட்டி கதை சொல்வதும் என சட்டமன்றத்தை Shooting… pic.twitter.com/LcLlSJPpPj
— DJayakumar (@djayakumaroffcl) June 23, 2026
மேலும், “5 நிமிஷம் பேசுனதுக்கே என்னாச்சு தெரியும்ல” என்று சட்டமன்றத்தில் கெத்தாகப் பஞ்ச் பேசும் முதல்வர் அவர்களே, அதையே தான் நாங்களும் உங்களிடம் கேட்கிறோம்; தமிழ்நாட்டில் நிலவி வரும் கடுமையான மின்வெட்டு, விவசாயிகளின் தீர்க்கப்படாத பிரச்சினைகள், பாலியல் வன்கொடுமைகள், தினசரி நடக்கும் சட்ட ஒழுங்கு சீர்கேடுகள் பற்றியோ அல்லது நீங்கள் தேர்தலின் போது அள்ளி வீசிய கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் பற்றியோ சட்டமன்றத்தில் ஒரு 5 நிமிஷமாவது உருப்படியாகப் பேசுங்கள் என்றும், தயவுசெய்து இனிமேலாவது ரீல்ஸை (Reels) மூடிவிட்டு ரியாலிட்டிக்கு (Reality) வாருங்கள் என்றும் முதலமைச்சர் விஜய்யை மிகக் கடுமையாக வெளுத்து வாங்கியுள்ளார்.
ஜெயக்குமாரின் இந்த அதிரடி ட்வீட்டுக்குக் கீழே தவெக தொண்டர்கள், “ஏன் பேசலனு கேக்குறீங்க, பேசுனா ஐயோ பேசிட்டாரேனு கதறுறீங்க, அடுத்தது சிபிஐ உடன் பேசலாம் அது விரைவில் வரும்” என்று கமெண்ட்டுகளில் பதிலடி கொடுத்து மல்லுக்கட்டி வருவதால், சமூக வலைதளங்களில் தற்போது அதிமுக – தவெக இடையேயான இந்த வார்த்தைப் போர் காட்டுத்தீயாய் பரவி இணையத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளது.
