மத்தியப் பிரதேச மாநிலத்தில், தனது செல்ல நாயைத் தாக்கிய சிறுத்தையை விவசாயி ஒருவர் உரிமையோடு கடிந்துகொள்ள, அதை அந்தச் சிறுத்தை குற்ற உணர்ச்சியோடு அமைதியாகக் கேட்டுக்கொண்ட சுவாரஸ்யமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மாதவ் புலிகள் காப்பகம் அருகே உள்ள ஹடோட் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மனிஷ் மல்ஹோத்ரா காரில் சென்றுகொண்டிருந்தபோது, சாலையோரம் மேட்டின் மீது சிறுத்தை ஒன்று அமர்ந்திருப்பதைப் பார்த்துள்ளார். உடனே காரை நிறுத்தி, ஜன்னல் கண்ணாடியை இறக்கிவிட்டு அந்தச் சிறுத்தையிடம் பேசத் தொடங்கியுள்ளார்.
தான் செல்லமாக வளர்க்கும் ‘டப்பு’ என்ற நாயை நேற்று தாக்கியது நியாயமா என்று அந்த விவசாயி உரிமையோடு கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், கிராம மக்களுக்கு எந்தத் தீங்கும் செய்யாமல் அமைதியாக இருக்குமாறும் அந்தச் சிறுத்தையிடம் கேட்டுக்கொண்டார்.
விவசாயி திட்டுவதையும் பேசுவதையும் கேட்ட அந்தச் சிறுத்தை, தப்பு செய்த பள்ளிச் சிறுவனைப் போல அமைதியாக அவரை உற்றுப்பார்த்தபடியே கேட்டுக் கொண்டிருந்த காட்சி கேமராவில் பதிவாகியுள்ளது.
#WATCH | 'Kal Tumne Dabbu Ko Pakad Liya': Farmer Stops Car, Chides Leopard For Att*cking His Dog In Shivpuri#MadhyaPradesh #Shivpuri #Leopard pic.twitter.com/2eRTz67EWz — Free Press Madhya Pradesh (@FreePressMP) August 17, 2026 “>
வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில் சிறுத்தைகளின் நடமாட்டம் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், மனிதருக்கும் வனவிலங்குக்கும் இடையே நடந்த இந்த அபூர்வமான நிகழ்வு இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
