பள்ளி ஒன்றில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலந்துகொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், அங்கே முறையான அமைப்புகளும் நெறிமுறைகளும் இல்லாதது குறித்து நிர்வாகிகளிடம் தனது கோபத்தையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளார்.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் உரையாற்றிய கபில் தேவ், பள்ளியில் அடிப்படை ஒழுங்குமுறை கூட பின்பற்றப்படவில்லை என்று சாடினார். குறிப்பாக, சமுதாயத்தில் மிக முக்கியமான இடத்தில் இருக்கும் ஆசிரியர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை எனத் தனது அதிருப்தியைத் தெரிவித்தார்.

மேலும், தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு குறித்துப் பேசிய அவர், வெறும் புகைப்படம் எடுப்பதற்காக மட்டுமே தன்னை அழைத்திருப்பதாக முன் கூட்டியே சொல்லியிருந்தால், அதற்குத் தனியாக நேரம் ஒதுக்கி வந்திருப்பேன் என்று காட்டமாகக் குறிப்பிட்டார்.

விளையாட்டு காலம் முதலே வெளிப்படையாகப் பேசும் குணமுடைய கபில் தேவ  உரையாடிய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, இணையவாசிகளிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

“>

பள்ளி நிகழ்ச்சிகளில் முறையான ஒழுக்கத்தைப் பேண வேண்டும் என்றும், ஆசிரியர்களை முறையாக மதிக்க வேண்டும் என்றும் கபில் தேவ் பேசிய கருத்துக்களுக்குப் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.