சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உருவாக்கிய ‘வந்தே மாதரம்’ பாடல் இன்றுவரை இந்தியா முழுவதும் தேசப்பக்தியின் அடையாளமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தற்போது இப்பாடல் விவகாரம் மீண்டும் அரசியல் அரங்கில் தீப்பற்றியுள்ளது.

தேசிய கீதத்திற்கு இணையான உணர்வுடன் பொதுமக்களால் இன்றளவும் முழங்கப்பட்டு வரும் ‘வந்தே மாதரம்’ பாடலை, தற்போது அரசியல் லாபத்திற்காகப் பயன்படுத்தும் முயற்சிகள் நடப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, அக்கோடிப்பாடலில் உள்ள துர்கை தேவியைப் போற்றும் பகுதியைக் கட்டாயமாக்குவதன் மூலம் மத்திய அரசு தேவையற்ற சர்ச்சைகளைத் திட்டமிட்டு உருவாக்குவதாகக் கூறப்படுகிறது. வந்தே மாதரம் மீது உண்மையான அக்கறைக்குப் பதிலாக இதன் பின்னணியில் அரசியல் நோக்கம் உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

“>

 

சிறுபான்மையினரை எதிர்க்கச் செய்து, அதன் மூலம் பெரும்பான்மை சமூகத்தினரின் வாக்குகளைத் துருவப்படுத்தித் தன் பக்கம் ஈர்க்கும் தந்திரமான யுக்தியையே இது போன்ற நடவடிக்கைக் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கடந்த பல ஆண்டுகளாகவே இத்தகைய உத்திகளைக் கொண்டே தேர்தல் அரசியலில் கட்சிகள் தாங்கள் அதிகாரத்தைத் தக்கவைத்து வருவதாகவும் கருத்துகள் பரவலாக முன்வைக்கப்படுகின்றன.