கடந்த சில நாட்களாகத் தொடர் கைது நடவடிக்கைகள் அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டியுள்ள உதயநிதி ஸ்டாலின், தற்போதைய அரசு கடும் பாதுகாப்பின்மை உணர்வுடன் செயல்பட்டு வருவதாகக் குற்றம்சாட்டியுள்ளார். மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சிக்கு மாறாக, எங்கு நோக்கினும் கைது நடவடிக்கைகள் தாராளமாக அரங்கேறி வருவதாகக் குறிப்பிட்ட அவர், சமூக வலைதளங்களில் கருத்துப் பதிவிடுவோர் கூட காவல்துறையின் இலக்காக மாறுவது பாசிச ஆட்சியின் வெளிப்பாடு என சாடியுள்ளார்.

தூங்கி எழுந்ததும் எதிர்க்கட்சியினர் அல்லது மாற்றுக்கருத்து உடையவர்களில் யாரைக் கைது செய்யலாம் என்று திட்டமிட்டே அட்டவணை தயாரித்து அரசு செயல்பட்டு வருவதாக அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

“>

 

இந்த இக்கட்டான மற்றும் சவாலான சூழ்நிலையில் வழக்கறிஞர்கள் தான் மிகவும் பிஸியாகவும், ஜனநாயகத்தைக் காக்கும் பொறுப்பிலும் உள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராகச் சட்ட ரீதியாகக் குரல் கொடுக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.